சர்வதேச அளவில் கடல் பாதுகாப்பு ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலான மிலன் 2024 கடற்படை பயிற்சிகள் வரும் 19ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளன.
இதில் 51 நாடுகளின் கடற்படை பங்கேற்பதுடன் 15 நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்புகின்றன.
வங்கக் கடலில் வரும் 24ஆம் தேதி முதல் 3 நாட்கள் 35 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், 50 விமானங்களின் பயிற்சி நடைபெற உள்ள நிலையில், உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள கனடாவும் தனது கடற்படையை இந்தியா நடத்தும் பயிற்சிக்கு அனுப்புகிறது.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட உள்ளனர்.