காங்கிரசின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியதால் மின்கட்டணத்தைகூட கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்தார்.
2018-19 நிதியாண்டில் 45 நாட்கள் தாமதமாக கணக்கு தாக்கல் செய்ததாகவும் அதுதொடர்பான விசாரணை வருமானவரி தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறிய அவர், இதேபோல தீர்ப்பாயத்தில் உள்ள பல வழக்குகளில் வங்கிக்கணக்கு முடக்கப்படவில்லை என்றார்.
210 கோடி ரூபாய் வரி நிலுவையை காங்கிரஸ் செலுத்த முன்வராததால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே வருமானவரி தீர்ப்பாயம் பிப்ரவரி 21ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.