கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் விவசாய நிலத்தில் கொத்தமல்லி, புதினா, கீரைகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில் துரை என்ற ஏரியில் அசுத்தமான நீரில் கீரைகளை வியாபாரிகள் சுத்தம் செய்கின்றனர், என மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார், இது போன்ற அசுத்தமான நீரில் கீரைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது.
இது போன்ற நீரில் கீரைகளை சுத்தம் செய்ய கூடாது என எச்சரித்து அனுப்பினர்.