கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்க உத்தரவிட்டனர்.
ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறும் ஆணையிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு வரம்பற்ற பங்களிப்பை வழங்க அனுமதிக்க முடியாது என்றும் கூறினர்.