2025-ஆம் ஆண்டுக்குள் பனிப்பாறைகள் உருகி வளைகுடா ஓடையில் இருந்து கடல் நீரோட்டம் தடைபடும் சூழல் ஏற்பட்டு கடும் பாதிப்புகள் உருவாகக் கூடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதில் வளைகுடா ஓடை முக்கிய பங்காற்றும் நிலையில், அதில் பாதிப்பு ஏற்பட்டால் வடக்கு அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் ஐரோப்பாவில் ஒரு சில தசாப்தங்களுக்குள் 10 டிகிரி வரை வெப்பம் குறையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாக புயல்கள் அதிகரிப்பது, மழை பெய்வதில் பாதிப்பு, கடல் நீர்மட்ட உயர்வு போன்றவை ஏற்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவதிப்படும் சூழல் ஏற்படக் கூடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.