இன்னும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை எஸ்பிஐ உடனடியாக நிறுத்தவும் இதுவரை பெற்ற பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரொக்கமாக அல்லாமல் மின்னணு பணப்பரிவர்த்தனையிலும் நன்கொடை அளிக்க இயலும் என்பதால் இது கருப்புப் பணத்தை தடுக்கும் என்றோ வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றோ கருத இடமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து எவ்வளவு நன்கொடை பெறுகின்றனர் என்ற தகவலை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் ஏகமனதாக அளித்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.