அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் நடைபெற்ற கேன்சஸ் சிட்டி ரக்பி அணியின் வெற்றி பேரணியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தாண்டுக்கான ரக்பி தொடரில் கேன்சஸ் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், வெற்றி பேரணியில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கானோர் ரயில் நிலையம் வெளியே திரண்டிருந்தனர்.
அப்போது 2 பேர் கண்மூடித்தனமாக சுட்டதால் மக்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 800 போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், ஆயுதங்களுடன் இருந்த 2 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.