குவைத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 4 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்களது குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் குவைத் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்று மீன்பிடித்த போது, அவர்களின் விசைப்படகில் இருந்த ஈரானைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்ததால் தமிழக மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.