இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி நாளை அந்நாட்டிற்குச் செல்ல முடிவு செய்துள்ளார். கத்தார் மன்னர் தமீமை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை வீரர்கள் 8 பேரின் விடுதலையில் பிரதமர் மோடியே நேரடியாக இருநாடுகளின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையை கவனித்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்தியர்களை விடுவிக்க பிரதமரின் அறிவுறுத்தலின் படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரகசியமாக பலமுறை கத்தார் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் பலன் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.