​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

Published : Feb 13, 2024 6:41 AM

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

Feb 13, 2024 6:41 AM

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று அபுதாபி செல்கிறார்.

இந்தியா அரபு அமீரகத்திற்கிடையிலான நட்பை பலப்படுத்தவும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயத்துடன் மோடிக்கு உள்ள நட்புறவு இந்தப் பயணத்தில் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

700 கோடி ரூபாய் செலவில் சிற்ப சாஸ்திரத்தின்படி மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயணன் கோவிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.