உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி செல்ஃபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சார்ஜ் செய்யும் சாதனத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இயற்பியல் துறை பேராசிரியர் அஜய் சோனி தலைமையிலான குழுவினர் தெர்மோஎலக்ட்ரிக் முறைப்படி இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளனர். குறைந்த சக்தி கொண்ட நெகிழ்வான எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்வது இனி பிரச்சனை இல்லை எனவும், மனித உடலின் வெப்பத்தால் சார்ஜ் செய்யப்படும் தெர்மோஎலக்ட்ரிக் மாட்யூலை உருவாக்கியுள்ளோம் என்று அஜய்சோனி தெரிவித்துள்ளார்.