தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகராக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிந்து என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த அவர் எர்ணாகுளத்தில் ரயில்வே துறையின் மின் பிரிவில் பணியாற்றிய போது கையில் ஏற்பட்ட காயத்தால் வணிகப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அதன் பின் டிக்கெட் பரிசோதகர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.