கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காததால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்ததாகவும் தற்போது 4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் இதனை தெரிவித்தார்.