குளித்தலை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் கேட்டு தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.