செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு சீனாவின் ஷாவ்மி நிறுவனம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவோரில் 18 சதவீதம் பேர் ஷாவ்மியின் எம்.ஐ. மற்றும் ரெட்மி ஃபோன்களை பயன்படுத்திவருகின்றனர்.
2020-ஆம் ஆண்டு, சீனா உடனான எல்லை பிரச்சினையைத் தொடர்ந்து அந்நாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை மத்திய அரசு விதித்தது. இந்நிலையில், இந்தியாவில் உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பன்னாட்டு நிறுவனங்களின் பரிந்துரையை மத்திய அரசு கேட்டிருந்தது.
அதற்கு சிறப்பு ஊக்கத்தொகை தருமாறும், பேட்டரி, யு.எஸ்.பி. கேபிள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறும் ஷாவ்மி நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.