பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
இன்று பகல் 1 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜகுநாத் ஆகியோர் காணொளி வாயிலாக பங்கேற்கின்றனர்.
அண்டை நாடுகளில் வேகமாகவும் தடையற்ற முறையிலும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு இந்த யுபிஐ சேவை வாய்ப்பளிக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.