"இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உலக அரங்கில் மரியாதை கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி உழைத்துள்ளார்"
என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில், காசி விஸ்வநாதர் வளாகப் பணிகள், பல்வேறு கலாச்சார பண்பாட்டு மையங்களின் புத்தாக்கம் போன்றவற்றை தமது உரையில் குறிப்பிட்டார்.
யோகா,ஆயுர்வேதம், போன்ற பாரம்பரிய மருத்துவ உடல் ஆரோக்கிய முறைகளுக்கு மோடி அரசு புத்துயிர் அளித்திருப்பதாக கூறினார்.