தமிழகம் முதல் முறையாக தேர்தலில் மும்முனைப் போட்டியை சந்தித்துக்கொண்டு இருப்பதாகக் கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தங்களுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கும் கட்சிகள் குறித்து தற்போதைக்கு எதையும் கூற முடியாது என்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு 20 விழுக்காடு வாக்குவங்கி கிடைத்திருக்கிறது என்ற செய்தி வரவேற்கத்தக்கது என்றார்.