கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சுற்றி உள்ள பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு சரியான கொள்முதல் விலை கிடைப்பதில்லை என்பதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விதை, உரம், அறுவடை என கிலோவிற்கு 40 ரூபாய் வரை செலவாகும் நிலையில், மொத்த கொள்முதல் வியாபாரிகள் 5 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.