பழனியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை, அந்தப் பெண் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணிடம் அடிவாரம் பகுதியில் தேங்காய் கடையில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணே அவரை சரமாரியாகத் தாக்கினார்.