ஐரோப்பிய ஒன்றியத்தால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளை கண்டித்து அண்டை நாடான ஹங்கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில், உக்ரைனுக்கு உதவுவதற்காக அந்நாட்டு வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
உக்ரைனிலிருந்து மலிவான விலைக்கு வேளாண் பொருட்கள் கிடைப்பதால் தாங்கள் நஷ்டமடைவதாக கூறி, உக்ரைன் எல்லை அருகே திரண்டு ஹங்கேரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்றொரு அண்டை நாடான போலந்திலும், உக்ரைனில் இருந்து வேளாண் பொருட்கள் வராத வண்ணம் எல்லை அருகே டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.