ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 66வது ஆண்டு ஓபரா மற்றும் பாலே நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் முன்னிலையில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்க அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து 144 இளம் ஜோடிகளும் விருந்தினர்களும் கை கோர்த்தபடி அணி வகுத்தனர்
ஓபரா மற்றும் பாலே நிகழ்ச்சிகளின் தொடக்கமாக வெள்ளை நிற ஆடை அணிந்த பெண்கள் கையில் பூக்கொத்துகளை ஏந்திக் கொண்டு வந்தனர்.
பாலே கலைஞர்களும் ஓபரா கலைஞர்களும் நடனம் ஆடியும் பாடியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பூக்கொத்துக்களை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்