தமிழகத்திற்கு வேலைக்காக வரும் வட மாநிலத்தவர்களின் முகவரியை பட்டியலிடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி வே கணேசன் தெரிவித்தார்.
சென்னையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அவர், வெளிமாநில தொழிலாளர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் போலத் தான் பாவிக்கப்படுவதாகவும் கூறினார்.