இந்தியாவில் குறைந்த விலையுள்ள சிறிய கார்களின் விற்பனை 8 ஆண்டுகளில் 34 சதவிகிதத்தில் இருந்து சென்ற ஆண்டில், ஏறக்குறைய பூஜ்யம் ஆகியுள்ளதாக வாகனத் துறை புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் ரூபாய் வரை விலையுள்ள நடுத்தர விலை கார்கள் விற்பனை, மாற்றமின்றி 54 சதவிகிதமாக நீடித்து வருகிறது. அதேநேரம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள எஸ்யுவி உள்ளிட்ட சொகுசு கார்கள் விற்பனை, 12 சதவிகித்தில் இருந்து 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.