வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6 புள்ளி 5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் நோக்கில் வட்டி விகிதத்தை குறைக்காமலிருக்க நிதிக் கொள்கை ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து 6ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன் வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லை. 2024-25ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் RBI கணித்திருக்கிறது.