அமெரிக்கா பலவீனமானது மற்றும் நம்பகத்தன்மையற்றது என்பதால் ரஷ்யாவை தனது நெருங்கிய கூட்டாளியாக இந்தியா கருதுவதாக, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக விரும்புபவரும் இந்திய வம்சாவளி பெண்ணுமான நிக்கி ஹேலே தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தற்போதைய சர்வதேச சூழலில், கூட்டாளி நாடுகளை தேர்வு செய்வதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.
பிரதமர் மோடியுடன் உரையாடியிருப்பதாகவும் அமெரிக்காவை கூட்டாளியாக ஏற்க இந்தியா விரும்பினாலும் தற்போது அமெரிக்க அரசு பலவீனமாக இருப்பதால் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் நிக்கி தெரிவித்தார்.