பாரத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 80 ஆயிரம் டன் கோதுமையும், 3 லட்சம் டன் பருப்பும் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட பதிலில்,
கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடங்குகளில் கோதுமை, அரிசி போன்றவற்றின் கையிருப்பு தேவைக்கும் அதிகமாகவே இருப்பதாக மத்திய அரசு அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.