நெருக்கடிகளுக்கு இடையே இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரீப், பிலாவால் பூட்டோ கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கான் போட்டியிடும் தகுதியையும் இழந்துவிட்டார். அவரது கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை அந்நாட்டு உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.