பா.ஜ.க தங்களுடைய வேலையை கம்பீரமாக சலனமின்றி செய்து வருவதால் மக்களும் தங்கள் பக்கம் திரும்பி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லி சென்று திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை கடந்த சில ஆண்டுகளாக பலப்படுத்தி வருகிறோம், அது குதிரையைப் போன்றது, கூட்டணி என்பது வண்டியைப் போன்றது என்பதால் பாஜக தான் வண்டியை இழுத்துச் செல்ல வேண்டுமென கூறினார்.
வரும் 11 ஆம் தேதி பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டா வருவதால் மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் என் மண், என் மக்கள் யாத்திரை நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என அவர் கூறினார்.
தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் பேச்சில் சாதிய வன்மம் இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, 2ஜி தொடர்பாக விரைவில் மேலும் பல டேப்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.