தென் அமெரிக்க நாடான ஈகுவடார் உடனான உறவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரஷ்யா, இந்தியாவில் இருந்து வாழைப் பழங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
ராணுவ உபகரணங்களை ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்து வந்த ஈகுவடார், தற்போது அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்து வருவதே பிரச்சனைக்கு காரணம்.
இதனால் கோபம் கொண்ட ரஷ்யா, ஈகுவடாரில் இருந்து பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து பப்பாளி, கொய்யா, மாம்பழம், அன்னாசிப்பழங்களையும் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.