சீன புத்தாண்டு வரும் பத்தாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியதால் ஷாங்காய் ரயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் அலைமோதியது.
சீன புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படும் வசந்த கால திருவிழாவின்போது சொந்த ஊர்களில் இருப்பதை சீனர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கோடிக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் உலகின் மிகப்பெரிய மனிதர்கள் இடம்பெயரும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
வசந்த கால திருவிழாவுக்கு முன்பும், பின்பும் சுமார் தொள்ளாயிரம் கோடி பயணங்கள் நடைபெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.