குரோமிய கழிவுகள் வெளியே செல்லாத வகையில் தடுக்க நடவடிக்கை, ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும் : அமைச்சர்
Published : Feb 07, 2024 7:26 PM
குரோமிய கழிவுகள் வெளியே செல்லாத வகையில் தடுக்க நடவடிக்கை, ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும் : அமைச்சர்
Feb 07, 2024 7:26 PM
ராணிப்பேட்டையில் டி.சி.சி.குரோமிய தொழிற்சாலையின் குரோமிய கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்த நிலையில், குரோமிய கழிவுகள் வெளியே செல்லாத வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கில் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் திட்டத்தை அமைச்சர் காந்தியுடன் இணைந்து துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.