மும்பையின் கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றியதாக தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி படகை மும்பை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குவைத்திலிருந்து வந்திருந்த படகில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இருந்ததாகவும், ஆனால் அவர்களிடம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லையென தெரிவித்த போலீஸார் குவைத்திலிருந்து இங்கே எப்படி வந்தார்கள் என விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.