​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமலாக்கத்துறை அதிகாரி எனக் கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 5 பேர் கைது

Published : Feb 06, 2024 10:02 AM

அமலாக்கத்துறை அதிகாரி எனக் கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 5 பேர் கைது

Feb 06, 2024 10:02 AM

திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி நூல் வியாபாரியிடம் ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அங்குராஜ் என்ற நூல் வியாபாரிக்கு நண்பர்கள் மூலம் அறிமுகமான விஜய் கார்த்திக் என்ற நபர் தாம் ஆந்திராவிலுள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

தங்களது நிறுவன வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் தற்போது கட்டுமானப் பணிக்காக ரொக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கொடுக்கும் பணத்தை இருமடங்காக உடனடியாக வங்கிக் கணக்கில் டிரான்ஸ்பர் செய்வதாக அவர் கூறியதை நம்பி, ஒரு கோடியே 69 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து, வீடியோ காலில் விஜய் கார்த்திக்கிடம் அங்குராஜ் காண்பித்துள்ளார் .

சிறிது நேரத்தில் அமலாக்கத்துறை என்று கூறி வந்த சிலர் அந்தப் பணத்தை மிரட்டிப் பெற்றுச் சென்றுள்ளனர்.

விஜய் கார்த்திக்கின் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்த போலீசார், பெங்களூருவில் வைத்து அவர்களை மடக்கினர்.