20 லட்சம் பேரை கூட்டி காட்டவா கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு my v3 ads நிறுவனர் மிரட்டலா..? சவால் பேட்டியால் பரபரப்பு
Published : Feb 06, 2024 7:53 AM
20 லட்சம் பேரை கூட்டி காட்டவா கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு my v3 ads நிறுவனர் மிரட்டலா..? சவால் பேட்டியால் பரபரப்பு
Feb 06, 2024 7:53 AM
மோசடி வழக்கில் சிக்கி 5 மணி நேர விசாரணைக்கு ஆஜராண பின்னர் செய்தியாளர்களை சந்தித்த my v3 ads நிறுவனர் சக்தி ஆனந்தன், தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்ததோடு செய்தியாளர்களின் கேள்விக்கு குழப்பும் வகையில் பதில் அளித்தார்
ஆம்வே நிறுவனம் போல ஆயுர்வேத பொருட்களை வாங்குவோரை உறுப்பினர்களாக்கி பல கோடிகளை வாரிச்சுருட்டி வருதாக my v3 ads நிறுவனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து சக்தி ஆனந்தன், கோவை நீலாம்பூர் பைப்பாஸில் பெருங்கூட்டத்தை கூட்டினார்
இந்த மோசடி வழக்கு தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரான சக்தி ஆனந்தனிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் வெளியே வந்த அவர், முதலில் தன்னிடம் போனில் தகவல் சொல்லி விட்டு தான் சொன்ன இடத்துக்கு வந்தனர் என்றார் , பின்னர் கூட்டத்தை தான் கூட்டவில்லை தன் எழுச்சியாக கூடியதாக மறுத்து பேசினார்
முதலீடாக பணம் பெறவில்லை என்றும் வாங்கிய பணத்திற்கு பொருட்களை விற்றுவருவதாகவும் , ஆயுர்வேத பொருட்களை விற்க அனுமதி சான்று பெற தேவையில்லை, கடந்த 2 வருடமாக தடையின்றி பணம் கொடுப்பதாகவும் , உறுப்பினர்கள் விருப்பத்தின் பேரில் வாங்குவதால் நான் எப்படி தவறு செய்தவனாவேன் ?என்றார்
போலீசார் தங்கள் மீது 2 பிரிவில் வழக்கு பதிவு செய்ததாககவும் அந்த 2 பிரிவிலும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்
நான் நினைத்திருந்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெருங்கூட்டத்தை கூட்டி ஸ்தம்பிக்க வைத்திருக்கலாம் என்ற சக்தி ஆனந்தன், போலீசிடம் அனுமதி வாங்கி கொடுங்க, ஒரே வாரத்தில் 20 லட்சம் பேரை கூட்டி என்னோட பவரை காட்டுகிறேன் என்றார்
my v3 ads tv என்ற ஆன் லைன் சேனல் மூலம் 1000 கோடி மோசடி செய்ததாகவும், சக்தி ஆனந்தனை பினாமி என்றும் அளிக்கப்பட்ட புகார் குறித்து எழுப்பிய கேள்விக்கு , அதில் உள் நோக்கம் இருப்பதாக கூறி தவிர்த்தார்