பஸ் கதவை மூடிக் கொண்டு நடு வழியில் ஓட்டுநர்கள் சண்டை பறந்து மிதித்த நடத்துநர்...!
Published : Feb 05, 2024 4:05 PM
பஸ் கதவை மூடிக் கொண்டு நடு வழியில் ஓட்டுநர்கள் சண்டை பறந்து மிதித்த நடத்துநர்...!
Feb 05, 2024 4:05 PM
சென்னை கோயம்பேடு அருகே நடுவழியில் பேருந்தை நிறுத்தி இரண்டு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ள பயணிகள் அவர்களை சமாதானம் செய்த நிகழ்வு நடந்தேறியது.
சென்னை கொரட்டூரிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எல்70 என்ற மாநகர பேருந்து ஞாயிறு மாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது, பின்னால் வந்து நின்ற மற்றொரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் வழிகேட்டு ஹாரன் அடித்துள்ளார்.
ஆனாலும் வழி கிடைக்காததால் பின்னால் வந்த பேருந்தின் நடத்துநர் பாலகுமார், எல்70 பேருந்தின் ஓட்டுநர் சிவானந்தத்திடம் வழிவிடுமாறு கூறியுள்ளார்.
எதுவாக இருந்தாலும் உள்ளே வந்து பேசும்படி சிவானந்தம் கூறவே, பாலகுமாரும், அவரது பேருந்தின் ஓட்டுநர் புண்ணியமூர்த்தியும் எல்70 பேருந்திற்குள் ஏறியவுடன் தானியங்கி கதவுகளை பூட்டி விட்டு சிவானந்தம் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
நிறுத்தும் படி கூறியும் நிறுத்தாமல் சென்றதால் கியர் ராடை பிடித்து இழுத்து பேருந்து இயக்காதவாறு தடுத்தார் புண்ணியமூர்த்தி.
நடுவழியில் பேருந்து நின்றதும் இரண்டு ஓட்டுநர்களும் சட்டையை பிடித்துக் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்ள, எட்டி உதைத்து தாக்கினார் நடத்துநர் பாலகுமார்.
இந்த திடீர் சண்டையை பேருந்திலிருந்த ஒரு பயணியும், வெளியே இருந்த பொதுமக்களில் ஒருவரும் சமாதானம் செய்த பிறகு அங்கு போக்குவரத்து போலீஸார் இருதரப்பையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சக ஓட்டுநர் மீதான தாக்குதலை தடுக்காமல் முழு சம்பவத்தையும் L70 பேருந்து நடத்துநர் ஈஸ்வரன் வீடியோவாக பதிவு செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.