ஓட்டுநருக்கு மாரடைப்பு! ஆற்றுக்குள் விழுந்த கார்! சைதை துரைசாமியின் மகனை தேடும் பணிகள் தீவிரம்!
Published : Feb 05, 2024 3:06 PM
ஓட்டுநருக்கு மாரடைப்பு! ஆற்றுக்குள் விழுந்த கார்! சைதை துரைசாமியின் மகனை தேடும் பணிகள் தீவிரம்!
Feb 05, 2024 3:06 PM
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி சென்ற கார் இமாசலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கியதாகவும் அவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
விதார்த் - ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான என்றாவது ஒருநாள் திரைப்படத்தை இயக்கியவர் வெற்றி துரைசாமி முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன்.
புதிதாக இயக்கி வரும் திரில்லர் திரைப்படம் ஒன்றிற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தமது உதவியாளர் கோபிநாத்துடன் விமானம் மூலமாக இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார், வெற்றி துரைசாமி.
வாடகை கார் ஒன்றில் வெற்றி துரைசாமியும் கோபிநாத்தும் இமாச்சலப் பிரதேசத்தின் கஷாங் நாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் தன்ஜின் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், மலைப் பாதையில் இருந்து பள்ளத்தில் உருண்டு கீழே பாய்ந்து கொண்டிருந்த சட்லெஜ் நதியில் விழுந்து மூழ்கியதாக சொல்லப்படுகிறது.
காரின் சக்கரங்கள் ஆற்றில் மிதந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஹிமாச்சலப் பிரதேச போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மூழ்கிய காரில் இருந்த ஓட்டுநர் தன்ஜினை இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பள்ளத்தாக்கில் கார் உருண்ட போது கீழே விழுந்து படுகாயமடைந்திருந்த உதவியாளர் கோபிநாத் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டு காணமல் போனவரை தேடும் பணி நடைபெற்றுவருவதாக உள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்து சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசத்துக்கு விரைந்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் சைதாப்பேட்டையில் உள்ள அலுவலகம் முன் திரண்டனர்.