கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் தவறான தகவலை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக மும்பை விரோலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளது.
பிப்ரவரி 2-ஆம் தேதி தாங்களே மரண செய்தியை வெளியிட்டு விட்டு, மறுநாள் தாம் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.