பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் 24 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றதற்கு பழி வாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.