ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட வள்ளிக்கும்மி ஆட்டம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
16 ஆயிரம் கலைஞர்கள் ஒன்றிணைந்து 36 குழுக்களாகப் பிரிந்து பிரம்மாண்டமாக இந்த கலை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். 16 ஆயிரம் கலைஞர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளகளிடம் வழங்கினர்.