கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் லுலு ஹைபர் மார்க்கெட்டில் கணேஷ்லால் என்பவர் சிக்கன் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பிரித்துப் பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அதனை மீண்டும் லுலு ஹைபர் மார்க்கெட் எடுத்துச் சென்று கேட்டபோது, தவறை ஒப்புக்கொண்டு வேறு சிக்கன் தருவதாக கூறியதாக கணேஷ்லால் கூறுகிறார். அவர்களது சமாதானத்தை ஏற்காத கணேஷ்லால் உணவு பாதுகாப்புத்துறையில் புகாரளித்துள்ளார்.
கணேஷ்லாலின் இந்தப் புகார் குறித்து லுலு நிர்வாகத்திடம் கேட்டபோது, தாங்கள் பொருளை எடுத்துக்கொண்டு பணம் தருவதாகக் கூறினோம் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.