சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அரைக்கால் சட்டையுடன் சினிமா பாடலுக்குக் குத்தாட்டம் போட்ட இளைஞர்களின் வீடியோ காவல்துறை புகார் வரை சென்ற நிலையில், அவர்கள் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கபாலீஸ்வர கோயில் வளாகத்துக்குள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ பலரது கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
விக்கி என்ற பெயர் கொண்ட அந்த இளைஞருக்கும் அவரது நண்பருக்கும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரிக்கவே, தாங்கள் செய்தது தவறுதான் என்றும் இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.