ஆருத்ரா வழக்கில் முடக்கம் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான 49 சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை இந்தியா கொண்டுவரும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மோசடி செய்த பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 7000 ஏஜெண்டுகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, முதற்கட்டமாக அவர்களில் 500 பேருக்கு சம்மன் அனுப்பி சொத்துகளை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.