அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக தெற்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.
81 வயதான ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்துவருவதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வந்த நிலையில், ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதல் தேர்தல் தெற்கு கரோலினாவில் நடைபெற்றது.
ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட மரியான் வில்லியம்சனும், டீன் பிலிப்ஸும் தலா 2,000 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், ஜோ பைடனோ ஒரு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்று, 96 சதவீத வாக்குகளை தன் வசமாக்கினார்.