எதிர்வரும் சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கொண்டாட்டங்கள் தொடங்கின.
தலைநகர் பெய்னோஸ் ஏர்சில் டிராகன் வடிவங்களுடன் வீதிகளில் மக்கள் வலம் வந்தனர். சீன கலாசாரப்படி புதிய வாய்ப்புகள், தொடக்கங்களின் அடையாளமாக டிராகன் கருதப்படுகிறது.
டிராகன் பெயரிலான புத்தாண்டு பிறக்கவுள்ளதால் மக்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் நம்பிக்கையில் டிராகனை கொண்டாடுவதாக அர்ஜென்டினாவில் வாழும் சீனர்கள் தெரிவித்தனர்.