விவாதம் நடத்த தம்மை அழைத்த அமைச்சர் மனோ தங்கராஜுடன் பேசுவதற்கு தங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரை அனுப்பி வைக்கத் தயார் என்று அண்ணாமலை கூறினார்.
வேலூர் கே.வி.குப்பத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையே பேட்டியளித்த அவர், தாமும் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் விவாதம் நடத்துவதற்கு வரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
நடிகர் விஜய் பா.ஜ.க.வின் பி டீம் என்று விமர்சிக்கப்படுவது குறித்து பதிலளித்த அண்ணாமலை, யார் யாருடைய பி டீம் என்று தமக்குத் தெரியாது என்றும் பாஜக எப்போதும் மக்களுக்கான ஏ டீம் என்றும் கூறினார்.