கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் தலா 10 வகையான புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, வாசனை கொண்ட நீள் சன்ன ரக அரிசி, இனிப்புச் சோளம், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களில் புதிய ரகத்தையும் பன்னீர் திராட்சை, கத்திரி, கொத்தவரை, கீரை வகைகள், சிவப்பு புளி மற்றும் புதிய தென்னை ரகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இவை விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.