இந்திய கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் அட்டகாசத்தை எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ். சந்தாயக் கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத், இந்தியப் பெருங்கடல் அல்லது இந்திய பசிபிக் பிராந்தியத்தில் எங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்தாலும், அங்கு உடனடியாக விரைந்து செல்லும் அளவுக்கு இந்திய கடற்படை வலுவடைந்து இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய கடற்படை பலம் பெற்று வருவதன் மூலம் இந்திய பசிபிக் பிராந்தியத்தில் போதைப் பொருட்கள் மற்றும் ஆள் கடத்தல் தடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக சட்டவிரோத மீன்பிடித்தல் தடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.