ஒரு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 16 லட்சம் வாக்காளர்களில் 12 லட்சம் பேர் இந்துக்களாக இருக்கும் போது தி.மு.க. எப்படி அவர்களுக்கு விரோதமாக இருக்க முடியும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பினார்.
சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற அவரிடம் விஜய் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு விஜய் மக்களுக்கு சேவை செய்வதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் பதிலளித்தார்.