மெக்சிகோவில் மழை பொய்த்தால் பெனிடோ ஜரெஸ் அணையின் நீர்மட்டம் குறைந்து, அங்குள்ள 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் வெளியே தெரிகிறது.
வழக்கமாக தெற்கு மெக்சிகோவின் பல நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் அணையில் எப்போது இருக்கும் என்பதால், தேவாலயம் நீரில் மூழ்கியே காணப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்து வரும் நிலையில், கடந்த மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 47 சதவிகிதம் சரிந்தது.